கரும்புலிகள் நாள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரல்

தமிழீழ விடுதலைப் புலிகளினால் வருடாந்தம் யூலை ஐந்தாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வந்த கரும்புலி நாள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்முதற் கரும்புலியான மில்லரின் வீர மரணத்தை நினைவகூரும் நிகழ்வுகள் பகிரங்கமாகஇடம்பெற்றிருக்கவில்லை.

எனினும் இம்முறை யாழ்ப்பாணத்திலுள்ள கரும்புலி மில்லரின் நினைவுஇடத்தில் இன்றைய தினம் கரும்புலி நாள்நினைவுகூறப்பட்டுள்ளது.

மில்லர் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த யாழ்ப்பாணம் நெல்லியடியில் இன்றுமதியம் இந்த நினைவுகூரல் இடம்பெற்றிருந்த்து.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like