யாழில் அட்டகாசம் செய்த ஆவா குழு! மடக்கிப் பிடித்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்து பாரிய நட்டத்தை ஏற்படுத்திய ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒரே நாள் இரவில் 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றமை, அதற்கு அடுத்த நாள் நபர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதற்கமைய மேற்கொண்ட தேடுதலில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

28 வயதுடைய நாகலிங்கம் தயாகரன், 20 வயதுடைய பஞ்சலிங்கம் கிருஷன், 22 வயதுடைய சுதாகரன் தவரூபன் மற்றும் 23 வயதான நடராஜா மதுஷன் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like