பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் : தனியாக சென்ற சக்கரத்தால் பதற்றம்!!

பாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேரை ஏற்றிச் சென்ற பேருந்தின் சக்கரம் ஒன்று தனியாக பயணித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.

பதுளை – மஹியங்கனை வீதியில் பயணித்த பேருந்தின் முன் பக்க சக்கரம் திடீரென கழன்று சென்று சென்றமையால், பயணிகள் மத்தியல் பதற்ற நிலை ஏற்பட்டது.. எனினும் இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பயணித்து கொண்டிருந்த பேருந்தின் வலது பக்க சக்கரம் உட்பட பல இயந்திரங்கள் ஒன்றாக உடைந்து விழுந்துள்ளன. பேருந்தில் ஏற்பட்ட கோளாறே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது.

இந்த விபத்து ஏரிக்கு அருகில் அல்லது நீர் வீழ்ச்சிக்கு அருகில் நிகழ்ந்திருந்தால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like