கழிவுகளால் நிறையும் யாழ்.நகரம்!! பாராமுகம் காட்டும் யாழ் மாநகர சபை!!

யாழ். அத்தியடிப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் வீதியெங்கும் பொலித்தீன் பைகள் சிதறி காற்றில் பறந்நு திரிவதால் சுற்றுச்சூழல் மாசடைவது மட்டுமல்லவீதி விபத்துகளும் இடம்பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக மக்கள் மாநகர சபை மீது விசனம் தெரிவிக்கின்றனர்.

குப்பை எடுப்பதற்கான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டும் சரியான முறையில் குப்பைகளை அகற்றாத படியால் கால்நடைகள் குப்பைகளை இழுத்து வீதிக்கு விடுகின்றன.

யாழ். நகரப் பகுதியில் உள்ள இந்தப் பகுதியையே கண்டுகொள்ளாத மாநகர சபை ஏனைய பகுதிகளைக் கண்டு கொள்ளுமா?

குப்பைத் தொட்டிகள் வைக்காத பகுதிகளே சுத்தமாக இருக்கின்ற போதுகுப்பைத் தொட்டி வைக்கப்பட்ட இந்தப் பகுதி அசுத்தமாக இருக்கிறது. மாநகர சபையின் கவனத்திற்கு பல தடவைகள் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்.மாநகரத்தை தூய நகரமாக்குவோம் என்று சபதம் எடுத்ததோடு மாநகர சபையின் வேலை முடிந்துவிட்டதா? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

முகப்புத்தகங்களில் தாம் செய்யும் சிறிய வேலைகளை பெரிய அளவில் காட்சிப்படுத்தி விட்டு திறமை என்று பேசிக் கொள்ளும் முதல்வர் தொடக்கம் உறுப்பினர்கள் வரை சில இடங்களை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

பதவிகள் எடுப்பவர்கள் வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மாநகரத்தை தூய நகரமாக்க முடியும்.  இனியாவது செய்வார்களா இவர்கள்..?