வவுனியா நகரில் கோவில் கட்டுமானபணி செய்த தொழிலாளி கட்டிடம் இடிந்து வீழ்ந்து பலி!

வவுனியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வவுனியாவில் இன்று பிற்பகல் வெளிக்குளம் பகுதியியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் கோவில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை முதல் வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் உயரமான இடத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் பிற்பகல் 2 மணியளவில் கட்டிடம் இடிந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இதனால் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்,சக பணியாளர்கள் இவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மாத்தளை பகுதியைச் சேர்ந்த சிவா என்று அழைக்கப்படும் 30வயதுடை ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் தற்போது வசித்து வருகின்றார். இவ்விடயம் குறித்து உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இசச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். உயிரிழந்தவரின் சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like