இலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..?

போதைபொருள் கடத்தலின் மத்திய நிலையமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களும் போதை பொருள் கடத்தல் கார்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதா? என எண்ணத்தோன்றுகிறது.

அந்த அளவிற்கு இலங்கையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதும், போதை பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

அத்துடன் போதைப் பொருள் பாவனையில் சிறுவர்கள் உட்பட பெண்கள் மாணவர்கள் என பலரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்யும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியாவில் இருந்து வடக்கு பகுதி ஊடாக கடத்தப்படும் கேரளா கஞ்சா உட்பட விமான நிலையம் ஊடாக கொண்டுவரப்படும் ஹெராயின், போதை மாத்திரைகள் என அனைத்தும் இலங்கைக்குள் தாராளமாக கடத்தப்படுகிறது.

குறித்த போதைப் பொருட்களுக்கு சிறுவர்கள் முதல் மாணவர்கள் வரை அடிமையாக்கி போதைபொருள் வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் போதைபொருள் கடத்தல் காரர்கள் இறங்கியுள்ளனர்.

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் தொடங்கி பொலீஸ் உயர் அதிகாரிகள் வரை தொடர்வுகள் உண்டு .

இதனால் போதைபொருள் கடத்தலை தடுப்பதில் இலங்கை அரசாங்கம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் இந்த போதைபொருள் கடத்தலை தடுப்பதற்கு பால உயிர்களை பலிகொடுக்கவும் பலிஎடுக்கவும் வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அதாவது போதைபொருள் தடுப்பதற்கான யுத்தம் ஒன்றிற்கு அரசாங்கம் தயாராக வேண்டும்.

உலகில் மிக முக்கியமான பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளை அழித்தோம் என்று மார்புதட்டும் அரசாங்கம் போதைபொருள் கடத்தல்காரர்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறது என்றால் வேடிக்கையாக உள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து போதைபொருள் கடத்தலில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் மதவாத குழுக்களின் மத்திய நிலையமாக இலங்கை திகழ்கிறது.

உலகின் மிக மோசமான பயங்கர வாத அமைப்புக்களின் போதைபொருள் வர்த்தகம் இலங்கையின் ஊடாகவே நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் ISIS அமைப்புக்கான வலி நிவாரண போதை மாத்திரைகள் இத்தாலியில் இருந்து இலங்கை ஊடாக கடத்தப்பட்டதாக இத்தாலி அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் இத்தாலியில் இருந்தே இலங்கைக்கு போதைபொருள் கடத்தப்படுவதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல்கார்கள் இத்தாலியின் மூன்று முக்கிய நகரங்களில் இருப்பதுடன் அவர்கள் அங்கிருந்து இலங்கையில் உள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இத்தாலியின் மிலானோ, நாபோலி, வெரோனா ஆகிய நகரங்களில் இலங்கையை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இத்தாலியில் பெருமளவில் விற்பனையாகும் லத்தீன் அமெரிக்காவின் சிட்டி அட்டை மூலம் இவர்கள், இலங்கையில் உள்ள தமது சகாக்களை தொடர்புக்கொள்கின்றனர்.

அதேவேளை சுவிஸர்லாந்தில் இருந்த இலங்கையை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள், சுவிஸ் பொலிஸாரின் கண்காணிப்பை அடுத்து, இத்தாலிக்கு சென்றுள்ளதாக கூறப்படகிறது.

சுவிஸர்லாந்து எல்லையில் பாதுகாப்பு வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால், இவர்கள் இலகுவாக இத்தாலி சென்றுள்ளனர். இத்தாலிக்கு சென்ற இவர்கள் இலங்கையின் களுத்துறை மற்றும் களுவாமோதர பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இன்று இலங்கையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாளாந்தம் போதைபொருட்கள் மீட்கப்படுகின்றது என்றால் அது இலங்கைக்குள் எவ்வாறு? எங்கிருந்து? யாரால் கொண்டுவரப்பட்டது என்ற கேள்வியுடன் முடிக்கிறோம்.