அம்பாள்புரத்தை ஆட்டிப்படைத்த சிறுத்தை- புதிய தகவல் வெளியிட்ட கொழும்பு ஊடகம்!!

கிளிநொச்சி அம்பாள்புரத்தில் அண்மையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுத்தை குறித்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

குறித்த சிறுத்தை காட்டிலிருந்து வந்ததல்ல என்பதற்கும், அது மனிதர்களால் வளர்க்கப்பட்டது என்பதற்குமான அடையாளம் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து வாராந்தம் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுத்தையின் உடற்கூற்றுப் பரிசோதனையின்படி அது கூடு ஒன்றில் வைத்து வளர்க்கப்பட்டதற்கான அடையாளம் காணப்பட்டதாகவும், தொடர்ச்சியாக இரண்டு நான்கள் சாப்பாடு எதுவுமின்றி இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அந்த சிறுத்தை வெளியில் திறந்து விடப்பட்டபோது ஊர் மனைகளில் புகுந்து மக்களைத் தாக்கியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like