கிளைபோசெட் தடைநீக்கம்- வர்த்தமானி வெளியானது!!

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

கிளைபோசெட் தடை நீக்கம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கிளைபோசெட் களைநாசினியை இலங்கையில் இறக்குமதி செய்தல், விற்பனை மற்றும் விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி 1937 இன் கீழ் 35ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கிளைபோசெட் களைநாசினி மீதான தடையை நீக்க கடந்த மே மாதம் அமைச்சரவையின் அனுமதி அளித்திருந்தது.

அதற்கமைவாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.