வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்குப் பக்கச்சார்பாக நடந்து கொண்டமையாலேயே தற்போது இந்த நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பாக இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.






