வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் ஆபத்தான குளவிக்கூடுகள் காணப்படுவதாக பக்தர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
வவுனியா குருமன்காடு சிறி காளியம்மன் தேவஸ்தானத்திற்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் சென்று வருகின்றனர்.
ஆலயத்தின் நூழைவாயிலில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பெரிய குளவிகள் கூடு கட்டியுள்ளன. இதனால் ஆலயத்துக்குச் செல்லும் பக்த அடியவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.






