காதல் திருமணம் செய்துகொண்ட தங்கை… அண்ணனின் ஆத்திரத்தால் நடந்த சோகம்!

மதுரையில் தங்கையை காதலித்து திருமணம் சேட்டு கொண்ட இளைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதோடு, தட்டி கேட்ட தாயையும் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜர் சாலை காதர்கான் பட்லர் லைன் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவற்றின் மகன் பொன்ராஜ் (29). தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் பொன்ராஜ், தனது உறவினர் மீனா(23) என்பவரை காதலித்த வந்துள்ளார்.

இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், திருமணம் தடைபட்டது. ஆனாலும் மீனா- பொன்ராஜ் காதல் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் முருகன்கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த சம்பவம் மீனா குடும்பத்தாருக்கு தெரிய வரவே, ஆதிராமடைந்த மீனாவின் சகோதரர் பிரபு, வேகமாக அரிவாளை எடுத்துக்கொண்டு பொன்ராஜ் வேட்டை நோக்கி சென்றுள்ளார்.

அங்கு, நீ எப்படி என் தங்கையை திருமணம் செய்யலாம் என கூறிகொண்டே பொன்ராஜை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பொன்ராஜ் மிதக்க, அதனை தடுக்கும் முயற்சியில் பொன்ராஜ் தாய் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அவரையும் அரிவாளால் வெட்டியா பிரபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like