மறைந்து போன நுவரெலியா!! பொதுமக்கள் அசௌகரியத்தில்..!!

மலையகத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா நகரம் முழுவதும் பனிமூட்டத்தால் முடிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிகப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மஸ்கெலிய பொகவந்தலாவை வீதியிலும் நுவரெலியா செல்லும் அனைத்து வீதிகளும் கடும் பனி மூட்டத்தால் மறைத்துள்ளது.முன்னால் பயணிக்கும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டமாக உள்ளமையினால் இந்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள வாகனத்தின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை அவதானமாக ஓட்டுமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிக பனி மூட்டத்துடன் மலையத்தில் கடும் காற்று வீசுவதோடு, இடைக்கிடையே அடை மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் வழமைக்குமாறு மாறாக அண்மைக்காலமாக கடும் குளிராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like