யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் வழிப்பறி

யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்கிய யுவதியின் பணப்பையை பறித்த இளைஞரை யுவதி யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதிவரை விரட்டி வழி மறித்தபோதும் போதிய ஒத்துழைப்பு இன்மையால் வழிப்பறி இளைஞர் தப்பிச் சென்றார்.

மானிப்பாயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றுக்காலை 8 மணியளவில் பயணித்த பேரூந்தில் பயணித்த யுவதி ஒருவர் ஐந்து சந்திப் பகுதியில் இறங்கியுள்ளார். இதன்போது அப் பகுதியில் நடமாடிய இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணின் பணப்பையை பறித்துக்கொண்டு தப்ப முயற்சித்துள்ளார். இதனால் குறித்த பணப்பைநில் இருந்த சில ஆவணங்களையும் பணத்தையும் எடுத்த இளைஞன் பணப்பையை வீசிவிட்டு கால்நடையாக தப்பிச் சென்றார்.

இதனால் பணப்பையை இழந்த யுவதி மோட்டார் சைக்கிள் ஒன்றின் உதவியுடன் வழிப்பறி இளைஞனை விரட்டிய சமயம் குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியூடாக கஸ்தூரியார் வீதியை அடைந்தவேளையில் வழிப்பறி இளைஞன் முன்பாக மோட்டார் சயிக்கிளில் வழி மறித்த யுவதி வீதி வழியாக சென்றவர்கள் முன்பு இளைஞனை இனம்காட்டி பிடிக்குமாறு கோரியுள்ளார்.

இதன்போது அங்கி நின்ற இளைஞர் ஒருவர். வழிப்பறியில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடிக்க முயன்ற சமயம் கிட்ட நெருங்கினால் கத்தியால் குத்துவேன் எனக் கூறி வழிப்பறி இளைஞன் மீண்டும் தப்பிச் சென்றான். –

Get real time updates directly on you device, subscribe now.

You might also like