இளைஞர்களுக்கான தொழிற்சந்தை- யாழ்.வேம்படியில் !!

மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் யாழ்ப்பாண மாவட்ட திணைக்களத்துடன் இணைந்து ஏற்ப்பாடு செய்திருந்த மாபெரும் தொழிற்ச்சந்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

யாழ். மாவட்ட மேலதிக மாவட்டசெயலா்(காணி) எஸ்.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களத்தின் பணிப்பாளர் பி.எல்.கே திஸ்ஸநாயக்க, யாழ் மாவட்டசெயலா் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. நிக்கொலஸ் பிள்ளை, உதவித்திட்டமிடல் பணிப்பளர், வேம்படி மகளீர் உயர்தரப்பாடசாலை அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தத் தொழில் சந்தையில் காப்புறுதி நிறுவனங்கள், உயர் கல்வி நிலையங்கள்,விற்பனைபடுத்தல் சம்பந்தமான வேலைவாய்ப்பு கூடங்கள், ஹோட்டல்கள் வேலைவாய்ப்புக் கூடங்கள், பொலிஸ், இரணுவம்,கடற்ப்படை போன்ற வேலைவாய்புகளை கொடுக்கும் முகமாக அவற்றுக்காகன கூடங்கள் என 55 க்கும் மேற்பட்ட தொழில் வழங்கும் கூடங்கள் அமைக்கப்பட்டிந்தன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like