ஐந்து வருட காதலால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு! திருகோணமலை சம்பவம்

ஐந்து வருட காலமாக காதலித்து வந்த காதலி விருப்பமில்லை எனக்கூறியமையினால் போத்தலை உடைத்து காதலிக்கு முன்னாலேயே தனக்கு தானே குத்திய இளைஞனொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞன் வயிற்றில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 12.30மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – சுமேதகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.றுவன் பிரணாந்து என்ற இளைஞரே இதில் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் காதலித்ததாக கூறப்படும் பெண் இன்றைய தினம் தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு சக நண்பருடன் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணும், இளைஞரும் பேசிக்கொண்டிருந்த போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது கோபம் கொண்ட இளைஞன் காதலிக்கு முன்னாலே தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்து போத்தலை உடைத்து தனக்கு தானே வயிற்றில் குத்திக்கொண்டதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த ஐந்து வருடங்களாக இவரை காதலித்து வருவதை வீட்டார்கள் அறிந்திருந்தும் இவரை திருமணம் செய்ய வீட்டார் விருப்பமில்லையென கூறிய போதே இவர் போத்தலினால் குத்திக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வயிற்றில் படுகாயமடைந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like