சீர்கேடுகளாலும், மோசடிகளாலும் பாழாகிறதா? -வடக்கு மாகாணத்தின் தொழிற்கல்விச் சொத்து!!

வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் பழைமை வாய்ந்த யாழ்ப்பாண தொழில் நுட்பவியல் கல்லூரியில் பெரும் சீர்கேடுகளும், மோசடிகளும் இடமபெறுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. உயர் பதவிகளில்
உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறிச் சாடுகின்றனர்.

இது தொடர்பில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சு துரித விசாரணைகளை மேறகொண்டு குற்றவாளிகளை இனங்காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத் தொழில் நுட்பவியல் கல்லூரி மாணவர்கள் அண்மையில் கல்லூரி முன்பாக கவனவீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். கல்லூரியின் பதிவாளரால் கல்லூரி வளாகத்துக்குக்குள்
பொலிஸாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளது. பணியாளர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தே மாணவர்கள் போராடினர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை அடுத்தே தொழில் நுட்பக் கல்லூரிக்குள் நடந்த மோசடிகள், மற்றும் சீர்கேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எனினும் அவை மக்களுக்கோ, அல்லது அங்கு கல்வி கற்கும்
மாணவர்களுக்கோ இதுவரை தெரிந்திருக்கவில்லை என்பதே இங்குள்ள சோகம்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னணி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பதிவாளர், கல்லூரியின் சில போதனாசிரியர்கள், தற்காலிக மேலதிகப் பணிப்பாளர், மற்றும் தற்காலிகப் பணிப்பாளர், ஆகியோர்
பெரும் நிதி மோடிகளில் ஈடுபட்டுள்ளனர். அல்லது அந்த மோசடிகளில் தொடர்பு பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக திணைக்களத்தினூடாக நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதே
அவர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்களை திருப்பி விட்டனர்.

திணைக்களம் விசாரணைகளை துரிதப்படுத்தத் தவறியதாலேயே நான் பொலிஸாரை நாடவேண்டிவந்தது. நான் கையெழுத்திட்டது போன்று கையெழுத்திட்டு, இறப்பு முத்திரிரையையும் எவ்வாறோ தயாரித்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பதிவாளர் ஒரு கணக்காளராகச் செயற்பட வேண்டும். எனவே அதே அப்படி பெரும் மோசடிகளைச் செய்வதற்கு முன் தடுக்க வேண்டும் என்ற நோக்கிலும், திணைக்களம், மற்றும் அமைச்சு நடவடிக்கைகளை துரிதப்படுத்தாத போதுமே நான் பொலிஸாரை நாடினேன். பகுதி நேர விரிவுரையாளர்கள் வருடாந்தம் விண்ணப்பம் மூலம் கோரப்பட்டாலும் வேறு சிலரே தற்காலிக
மேலதிகப் பணிப்பாளரின் செல்வாக்கில் உள்வருவதால் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவதில்லை.

அத்துடன் மாணவர்களை உள்ளெடுக்கும் நடவடிக்கைகள் பதிவாளருடையதாகும். திணைக்களம் எனது தொலைபேசி இலக்கத்தையே முதலில் குறிப்பிட்டுள்ளது. இந்த வருடம் எதுவிதமான
நடவடிக்கைகளும் என்னால் மேற்கொள்ளப்படாமல் தற்காலிக மேலதிகப் பணிப்பாளர் குழப்பம் விளைவித்துள்ளார். அத்துடன் மாணவர்களின் நிதிசேகரிப்புக்கள் யாவும் பகுதி
போதனாசிரியர்களாலேயே கையாளப்படுவது சகலரும் அறிந்த விடயமாகும்.

இது தொடர்பாக மாணவர்கள் விளக்கம் தேவைப்படின் என்னை நேரடியாகக் கேட்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். கல்வி நிறுவனம் தொடர்பான சீர்கேடுகளை திணைக்கள அனுமதியின்றி வெளியிடுவது தவறு என்பதாலேயே நான் முன்பு தெரிவிக்கவில்லை. பத்திரிகைகளில் என்னைப்
பற்றிக் குறிப்பிட்டதன் பின்பு, நான் வாய்மூடியிருப்பது இனியும் வெளிஉலகுக்கு உண்மையை மறைப்பது போலாகிவிடும் என்றார்.

எனினும் பணிப்பாளர் முகுந்தன் பதிவாளர் கூறிய அனைத்தையும் மறுத்துள்ளார். கல்லூரியில் மாணவர்கள் பணம் செலுத்தும் பற்றுச்சீட்டுப் புத்தகங்கள் காணமல் போயுள்ளன. பெண்
பணியாளரின் அனுமதியின்றி அவருடைய மேசை உடைக்கப்பட்டுள்ளது. பதிவாளர் தற்போது கதையை மாற்றுகிறார். கல்விசார் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் கல்விசாரா நடவடிக்கைகளிலேயே ஈடுபட முயும் விசாரணைகள் ஆரம்பித்ததும் உண்மை தெரியும் என்று
பணிப்பாளர் தெரிவித்தார்.

வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி பணம் சேர்த்து மாவர்களை கற்றல் நடவடிக்கைகளுக்கு அனுப்பிவைக்கின்றோம். அங்கு இவ்வாறான மோசடிகளும், சீர்கேடுகளுட் இடம்பெறுவது கவலைக்குரியது. திணைக்களம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணர்களுடைய நிதி எங்கு சென்றது, அதை மோசடி செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

இது போன்று வேறு எந்தக் கல்லூரிகளிலும் இடம்பெறாது பார்த்துக் கொள்ளும் பொறுப்பு திணைக்களத்தைச் சாரும். எனவே திணைக்களம், மற்றும் அமைச்சு மோசடிகளை தடுக்க முயலவேண்டும். மணவரகள் தங்களுடைய கல்விச் செயற்பாடுகளை தடையின்றிக் கற்க நிர்வாhகத்துக்டையில் நிலவும் இவ்வாறன பிரச்சினைகளை கவனமெடுத்தி அவற்றைச் சீர்செய்ய வேண்டும் என்று கல்விச் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.