பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து- இந்தியாவுக்கு உடனே வானூர்திச் சேவை!!

பலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து இந்­தி ­யா­வுக்கு உட­ன­டி­யாக வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. வானூர்தி நிலை­யம் தற் போ­துள்ள நிலை­யி­லி­ருந்தே இந்­தச் சேவை தொடங்­கப்­ப­ட­வுள்­ளது. வானூர்­திச் சேவை­கள் ஆரம் பிக்­கப்­பட்ட பின்­னர், பிராந்­திய வானூர்தி நிலை­ ய­மாக பலா­லியை தர­மு­யர்த்­தும் கட்­டு­மா­னப் பணி­ கள் முன்­னெ­டுக்­கப்­ப­டும். இந்­தப் பணி­க­ளுக்­காக மேல­திக காணி­கள் எவை­யும் சுவீ­க­ரிக்­கப்­ப­டாது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந் திய அரசு, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இடை­யி­ லான முத்­த­ரப்­புச் சந்­திப்­பில் மேற்­படி முடிவு நேற்று எட்­டப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­ப­தற்­காக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத் துக்கு வருகை தந்­தி­ருந்­தார். இந்­திய நிதி உத ­வி­யில் ஆரம்­பிக்­கப்­ப­டும் நோயா­ளர் காவு­
வண்­டிச் சேவையை தொடக்கி வைப்­ப­தற்­காக இலங்­கைக் கான இந்­தி­யத் தூது­வர் தரன்­ஜித் சிங்­கும் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்­தார்.

இரண்டு தரப்­பி­ன ­ரை­யும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் நேற்­றுச் சந்­தித்­த­னர். ‘ஜெட்­விங்’ விடு­தி­யில் நேற்று மதிய உண­வு­டன் இந்­தச் சந்­திப்பு இடம்­பெற்­றது.

பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாக தரம் உயர்த்­து­வ­தற்கு முதல்­கட்­ட­மாக, தற்­போது இருக்­கின்ற நிலை­யி ­லேயே இந்­தி­யா­வுக்கு வானூர்தி சேவை­கள் ஆரம்­பிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தச் சேவை­யைத் தொடங்­கு­வ­தற்கு உட­ன­டி­யாக என்ன தேவை­கள் உள்­ள­னவோ அவை பூர்த்தி செய்­யப்­ப­டும்.

‘பன்­னாட்டு வானூர்­தி­கள் தரை­யி­றங்­கு­வ­தற்­கும், இங்­கி­ருந்து புறப்­பட்­டுச் செல்­வ­தற்­கும் ஏது­வாக சமிஞ்­சைக் குறி­யீ­டு­கள் (நவிக்­கே­சன்) அமைக்­கப்­ப­ட­வேண்­டும். குடி­வ­ரவு மற்­றும் குடி­ய­கல்வு, ஆயத் திணைக்­க­ளம் என்­ப­ன­வற்­றைச் செயற்­ப­டுத்­து­வ­தக்கு இப்­போ­துள்ள கட்­டி­டங்­கள் போதுமா என்­பதை ஆரா­ய­வேண்­டும். இல்­லா­வி­டின் தற்­கா­லிக ஏற்­பா­டு­கள் செய்­யப்­ப­ட­வேண்­டும்’ என்று சிவில் வானூர்­திப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யி­னர் சந்­திப்­பில் கூறி­யுள்­ள­னர். அவற்றை உட­ன­டி­யாச் செயற்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வி­லி­ருந்து தொழில்­நுட்­பக் குழு­வி­னர் உட­ன­டி­யாக வருகை தந்து, பலாலி வானூர்தி நிலை­யத்­தைப் பார்­வை­யிட்டு இந்­தி­யா­வுக்­கான வானூர்­திச் சேவைக்­கான ஏனைய அடிப்­ப­டைத் தேவை­களை மதிப்­பி­டு­வார்­கள். வானூர்­திச் சேவை ஆரம்­பிக்­கப்­பட்ட பின்­னர் பிராந்­திய வானூர்தி நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்தி ஏனைய நாடு­க­ளுக்­கான வானூர்­திச் சேவை­க­ளும் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.
தற்­போ­துள்ள வானூர்தி ஓடு­த­ளத்­துக்கு மேற்­குப்­பு­ற­மாக 500 ஏக்­கர் காணி­யில் புதிய பிராந்­திய வானூர்தி நிலை­யத்­துக்­கான கட்­டி­டங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த அபி­வி­ருத்தி முன்­னேற்ற மீளாய்வு மாதாந்­தம் கொழும்­பில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, ஈ.சர­வ­ண­ப­வன், எம்.ஏ.சுமந்­தி­ரன் மற்­றும் வலி.வடக்கு பிர­தேச சபைத் தவி­சா­ளர் சோ.சுகிர்­தன் ஆகி­யோர் பங்­கேற்­றி­ருந்­த­னர். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இரா­ஜாங்க அமைச்­சர் ஹர்ச டி சில்வா ஆகி­யோ­ரும், இந்­தி­யத் தரப்­பில், இலங்­கைக்­கான இந்­தி­யத் தூது­வர் தரன்­ஜித் சிங், இரண்­டாம் நிலைத் தூது­வர், யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தூத­ர­கத்­தின் கொன்­சி­யூ­லர் ஜென­ரல் பால­சந்­தி­ரன், தூத­ரக அதி­கா­ரி­க­ளும், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன், யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணு­வத் தள­பதி தர்­சன ஹெட்­டி­யா­ராச்சி, வான்­ப­டைத் தள­பதி, சிவில் வானூர்­திப் போக்­கு­வ­ரத்­துச் சபை பணிப்­பா­ளர் நிமல் சிறி ஆகி­யோ­ரும் இந்­தச் சந்­திப்­பில் கலந்து கொண்­டி­ருந்­த­னர்.