62 வயது மத போதகரால் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சுவிஸ் சிறுமி!!

துருக்கி நாட்டில் பிரபலமான மத போதகர் ஒருவருக்கு 15 வயது சிறுமியை சொந்த தாயாரே திருமணம் செய்து வைக்க முயற்சித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மாகாணத்தில் தற்போது தாயாருடன் குடியிருக்கும் 15 வயது சிறுமி செர்ரா.துருக்கிய தாயாருக்கு பிறந்த இவர் 2 வயதாக இருக்கும்போது இவரது பெற்றோர் விவாகரத்து பெற்றுள்ளனர்.இந்த நிலையில் செர்ராவின் தாயாருக்கு சுவிஸ் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இவரது 7-வது வயதில் சோலோதுர்ன் மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ளனர். இதனிடையே துருக்கியில் பிரபலமடைந்து வரும் அத்னன் ஒக்தார் என்ற மத போதகரின் ஆதரவாளர்கள் சிலரின் தொடர்பு செர்ராவின்ம் தாயாருக்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து பேஸ்புக் கணக்கு ஒன்றை தமது மகளின் பெயரில் துவங்கிய அவர் கிளாமரான புகைப்படங்களை அதில் பதிவேற்றியுள்ளார்.

இது அத்னான் ஒக்தாரின் ஆதரவாளர்கள் மூலம் அவருக்கு தெரியவர, அவர் சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ராவின் தாயாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தாம் செர்ராவை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து செர்ராவின் தாயார் மகளுடன் துருக்கி சென்றுள்ளார். துருக்கியில் உள்ள அவரது ஆசிரமத்தில் வைத்தே தாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறும் செர்ரா, பாலியல் உறவு மட்டும் வைத்துக் கொள்ளவில்லை எனவும், ஆனால் அத்னான் ஒக்தாரால் பலமுறை பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தமக்கு 18 வயது ஆகும் வரை பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அத்னான் தெரிவித்துள்ளதாக செர்ரா தெரிவித்துள்ளார்.

அத்னானின் துன்புறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கவே தமது தந்தையிடம் செர்ரா புகார் அளித்துள்ளார்.அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையிலேயே கடந்த வாரம் தமது ஆதரவாளர்கள் பலருடன் அத்னான் ஒக்தார் துருக்கி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது சோலோதுர்ன் மாகாண அதிகாரிகளும் செர்ராவின் தாயார் மீது விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like