35 வருடங்களுக்குப் பின் கொழும்பில் வலம் வர காத்திருக்கும் வெள்ளிரதம்! மகிழ்ச்சியில் பக்தர்கள்

கொழும்பு – ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 144ஆவது வருடாந்த வெள்ளிரத மஹோற்சவம் நடைபெறவுள்ளது.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் நடைபெற்றதைத் தொடர்ந்து தேர்த் திருவிழாவும் நடைபெறாமல் இருந்தது.

அந்த வகையில் 35 வருடங்கள் கடந்த நிலையில் இந்த வருடம் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 144ஆவது வருடாந்த வெள்ளிரத மஹோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த தேர் காலை 7 மணிக்கு செட்டியார் தெருவில் இருந்து புறப்பட்டு, மெயின் வீதி – சதாம் வீதி – ஜனாதிபதி மாளிகை – காலி வீதி – அலரி மாளிகை – பம்பலப்பிட்டி வழியாக இரவு 8 மணியளவில் பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவிலை சென்றடையவுள்ளது.

இதேவேளை, 29ஆம் திகதி காலை 8 மணிக்கு பம்பலப்பிட்டி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரவு 12 மணியளவில் மீண்டும் செட்டியார் தெரு கோவிலுக்கு வரவுள்ளது.

35 வருடங்களுக்குப் பின் இந்தி திருவிழா நடைபெறவுள்ள நிலையில், தென்னிந்திய திரைப்பட கலைஞர்களின் சிறப்பு பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து 2 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.

அந்த வகையில் 35 வருடங்களுக்குப் பின் களைகட்டப்போகும் இந்த திருவிழாவை காண்பதற்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.