சுழி­பு­ரம் சிறுமி கொலை வழக்கு- உற­வி­னர்­க­ளி­டம் வாக்­கு­மூ­லங்­கள்!!

பாலி­யல் வன்­கொ­டு­மைக்­குப் பின்­னர் கழுத்து நெரித்­துக் கொல்­லப்­பட்ட சுழி­பு­ரம் சிறு­மி­யின் உற­வி­னர்­க­ளி­டம் நேற்று வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டன.

இந்த வழக்கு நேற்று மல்­லா­கம் நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு வந்­தது. நீதி­மன்­றில் வைத்து வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டன. சிறு­மி­யின் கொலை தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­க­ளும் மன்­றுக்கு வழங்­கப்­பட்­டன. இது தொடர்­பா­கக் கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தே­ந­பர்­க­ளின் விளக்­க­ம­றி­யலை நீதி­மன்று நீடித்­தது.

சிறுமி கொலை
சுழி­பு­ரம் காட்­டுப்­பு­லம் பகு­தி­யில் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கழுத்து நெரித் துக் கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தார் 6 வய­துச் சிறுமி றெஜினா. சம்­ப­வம் கடந்த மாதம் இடம்­பெற்­றது. அந்­தக் கொலைச் சம்­ப­வம் தமி­ழர் தாய­கத்­தில் பெரும் சோகத்­தை­யும், சட்­டத்­தின் மீதான அதி­ருப்­தி­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யது.

சம்­ப­வம் தொடர்­பில் 6 பேர் வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளில் ஐவர் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

சிறு­மி­யின் கொலைக்கு நீதி கோரி மாண­வர்­கள், மக்­கள் திரண்டு ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். யாழ்ப்­பா­ணம், வடக்­கு­மா­கா­ணம், கிழக்­கு­மா­கா­ணம், தெற்கு மாகா­ணம் என பல இடங்­க­ளில் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. இந்த நிலை­மை­யில் மேலும் இரு­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். மூவ­ரும் மல்­லா­கம் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர்.

வாக்­கு­மூ­லம் பதிவு
இந்த வழக்கு நேற்று மல்­லா­கம் நீதி­வான் ஏஏ.ஆனந்­த­ராஜா முன்­னி­லை­யில் எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. றெஜி­னா­வின் கொலை தொடர்­பில் அவ­ரது தாய், தந்தை, மாம­னார் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டன. விசா­ரணை அறிக்­கை­கள் மன்­றில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. இறப்­புத் தொடர்­பான விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன. சந்­தேக நபர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் நீடிக்­கப்­பட்­டது. வழக்கு எதிர்­வ­ரும் 7ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like