பெண்ணை கொடூரமாக தாக்கும் இலங்கை பொலிஸ்! பதற வைக்கும் காணொளி அம்பலம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இரத்தினபுரியில் பெண்ணொருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2014ஆம் ஆம் ஆண்டு இரத்தினபுரி பேருந்து நிலையத்திற்கு அருகில் பொலிஸாரினால் தாக்கிய காட்சியை அங்கிருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதிக்காக சட்டத்தரணி உதுல் பிரேமரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கு விசாரணை இன்றைய தினம் நிறைவுக்கு வந்துள்ளது.

பெண்ணின் மனித உரிமை மீறப்பட்டதாக உத்தரவிட்டு நீதிமன்றம், அவருக்கு 50000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2014ஆம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி மாலை 3 மணிக்கு வீதியில் நின்ற பெண் மீது, எவ்வித காரணமும் இன்றி பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதல் தொடர்பில் அந்த பெண் மேற்கொண்ட முறைப்பாட்டினை பொலிஸார் பதிவு செய்து கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

தான் பொருளாதார சிக்கலில் இருந்தமையினால் விபச்சார தொழில் ஈடுபடுவதாக கூறி பொலிஸ் அதிகாரி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பெண் மீது எந்த குற்றமும் இல்லை எனவும், அவருக்கு 50000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like