தேர் இழுத்த இராணுவத்தினர்! வியப்பில் யாழ் மக்கள்!!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது.

இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர்.

அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், தமது சீருடையின் மேலங்கியை கழட்டி விட்டு தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இராணுவத்தினரின் திடீர் செயற்பாட்டை கண்ட பக்தர்கள் செய்வதறியாது இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த ஆலயத்தில் வருடாந்த தேர்த்திருவிழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற போது, அங்கு வருகைத்தரும் இராணுவத்தினர் தேர் இழுக்கினறமை சிறப்பம்சமாகும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like