ஈழத்து இளைஞரின் வியக்கும் தொழில் இது தான்

யாழ் – காரைநகர், தங்கோடை கிராமத்தைச் சேர்ந்த நிரோசன் என்பவர் 53 தேன் கூடுகளை வைத்து பராமரித்து வருகின்றார்.மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயிலும் பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டையில் தோற்றிய பின்னர், வீட்டின் ஏழ்மையைப் போக்கும் நோக்கில் தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.பின்னர், யாழ். மாவட்ட விவசாய திணைக்களம் ஊடாக தேனீ வளர்ப்பு தொடர்பில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞர் தற்போது மாதாந்தம் 15,000 தொடக்கம் 20,000 வரையான வருமானத்தை ஈட்டுவதாகவும் கூறியுள்ளார்.இதுபோன்ற முயற்ச்சிகள் வரவேற்கதக்க ஒன்றாகும். இவர் போன்று பலறும் மென்மேலும் வளர்ச்சி அடைய எங்கள் வாழ்த்துக்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like