கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம்

யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் நள்ளிரவு வாள்களுடன் நுழைந்த இளைஞா் குழு அட்டகாசம் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவத்தின் போது கண்ணாடித்துண்டுகள் வெட்டியதில் குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனடாவிலிருந்து வந்திருந்தவா்களின் வீட்டிற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் மோட்டா் சைக்கிளில் சென்ற 6 போ் கொண்ட குழுவினரே இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டனா்.குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன் வாயிற்கதவின் மின்விளக்குகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடா்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like