இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர ஆந்தை

இலங்கையில் புதிய வகையிலான ஆந்தை இனம் ஒன்று ஈர மண்டல வலயத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வனவிலங்கு புகைப்பட கலைஞர் புஷ்பலால் என்பவரின் கமராவில் இந்த ஆந்தையின் புகைப்படங்கள் சிக்கியுள்ளன.

ஆந்தையின் முகுது பக்கத்தில் கடுமையான ஊதாக நிறம் காணப்படுவதாகவும், நெஞ்சு மற்றும் அடிவயிற்று பகுதியில் பழுப்பு நிறம் மற்றும் ஊதா நிறங்கள் காணப்படுகின்றன.இந்த ஆந்தைகளிடம் கேட்கும் திறன் சற்று குறைவாக உள்ள நிலையில், அது ஏனைய ஆந்தைகளை போன்று தலையை தூக்கிய நிலையிலேயே காணப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 9 வகையான ஆந்தைகள் உள்ளன. ஒவ்வொன்று வித்தியாசமான நிறங்கள் மற்றும் தனித்தன்மையை வெளிப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எப்படியிருப்பினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆந்தை, Otusbakkamoenalattia என்ற ஆந்தை இனத்தின் அடையாளங்களை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஆந்தை இதற்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.