சாலை விளக்குகளைப் பொருத்த – கட்டணம் கோரும் மின்சார சபை!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையினால் நகரத்தை ஒளிரச் செய்வோம் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட 96 சாலை மின் விளக்குகளைப் பொருத்த, கட்டடணமாக இலங்கை மின்சார சபையினர் 90 ஆயிரம் ரூபா செலுத்துமாறும், உரிய தொகை செலுத்திய பின்னரே மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகள் மிகவும் நலிவடைந்து வருமானம் குறைந்த நிலையில் காணப்படுகின்ற போதிலும், பொதுமக்களுக்கான இலவச சேவைகளாக சாலை மின் விளக்குகளைப் பொருத்தி வருகின்றனர்.

மின்விளக்குகள் பொருத்தும் கட்டணமாக மின்சார சபைக்குச் செலுத்தும் கட்டணத்திற்கு மேலும் பல சாலைகளுக்கு மின்விளக்குகள் பொருத்தமுடியுமெனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை உள்ளுராட்சி சபைகள் சாலை மின்விளக்குகள் பொருத்துவதற்கு இலங்கை மின்சார சபையினர் இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் அறவிடவேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபையினர் கடந்த மாதக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like