தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்தனை வன்கொடுமைகளுக்கும் ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும்-ஜனநாயக போராளிகள்

இலங்கை தீவிலே தமிழினம் தமது இறையாண்மை வாழ்வுரிமைகளை இழந்து அல்லலுற்றபோது தமிழர்களின் நேசக்கரமாக தமிழர்களின் பாதுகாவலர்களாக தம்மை முன்னிறுத்தி நியாயப்பாடான தீர்வுகளை பெற்றுத்தருவார்கள் என நாங்கள் நம்பிய இந்தியபேரரசு எமது மக்களுக்கெதிராக தன் இராணுவ மேலான்மையை பயன்படுத்தி படுகொலைகளை அரங்கேற்றியபோதுதான் தமிழினம் பூமிப்பந்தில் ஏதிலிகள் என்பதை உணர்ந்தோம்.

இலங்கைஇந்திய ஒப்பந்தகாலத்தில் 2.8.1989 வல்வெட்டித்துறையில் இந்திய அமைதிப்படையினர் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்திய மிலேச்சத்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் உட்பட 63 அப்பாவிபொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அந்த அனர்த்தத்தின் 29 ஆண்டு நினைவேந்தல்கள் இன்றையதினம் வல்வெட்டித்துறையில் ஜனநாயகபோராளிகள்கட்சியினர் மற்றும் வல்வைநலன்புரிசங்கத்தினரின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது. இப்படுகொலையில் உயிரிழந்தவரின் உறவுகள் மாகாணசபை உறுப்பினர்கள் வல்வைநகரசபைதலைவர் போராளிகள் பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற படுகொலைகளுக்கான நீதி விசாரணைகளோ நியாயமான இழப்பீடுகளோ இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய நடுவண்அரசுகூட தனது இராணுவத்திடம் இப்படுகொலைக்கான உள்ளக விசாரணைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.
தமிழினம் தாம் சந்தித்த பேரிடர்களில் இருந்தெல்லாம் தானாகவே மீண்டெழுந்துள்ளது. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்தனை வன்கொடுமைகளுக்கும் ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும் அதுவரை வீழ்த்த்தப்பட்ட ஆத்மாக்களின் ஆத்மபலத்தோடு நாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like