பெற்றோர்களே!! அவதானம்!! மாணவிகள்,இளம் பெண்களை வைத்து விபச்சார விடுதி!! (Photos)

வாழைச்சேனை துறைமுகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள உணவு விடுதியில் இளம் பெண்களை வைத்து சமூக சீர் கேடான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த விடுதி முகாமையாளர் ஒருவர் சம்மந்தமான பதிவு இது.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் வாழைச் சேனையில் உணவு விடுதி ஒன்று தவறான காரியங்களிற்கு பயன்படுவதாக அறிந்த இளைஞர்கள் விடுதிக்குள் நுளைந்து சல்லடை போட்டதில் மதுபான போத்தல்கள் ஆணுறைகள் என்பன கண்டறியப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த விடுதி மூடப்பட்டிருந்தது.

பணத்திற்காக விலைபோகும் சில அப்பாவி பெண்களையும், ஏமாற்றி அளைத்து வந்த பெண்களையும் வைத்தே இந்த விடுதி இதுவரை இயங்கியுள்ளது.

முறையான பதிவுகள் இன்றி ஒரு ஆண் பல்வேறு பெண்களுடன் அடிக்கடி வந்து சென்றதற்கான சாட்சியங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.இந்நிலையில் இதற்கு பொறுப்பாக பாரம்பரியத்தை கட்டிக் காக்க வேண்டிய தமிழர் ஒருவரே இதனை ஊக்குவித்து பணம் பெற்று வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ் இழி தொழிலை செய்யும் நேரம் இவர் தன்னை கேவலப்படுத்துவதோடு, தனது உறவு பெண்களையும் இவ்வாறு பயன்படுத்த மாட்டாரா என கேள்விக்குறி போட்டு, பின்னர் இவர்கள் வீட்டு பெண்களும் இப்படிப்பட்டவர்களே.. எனும் நிலைக்கு இன்று கொண்டுவந்து விட்டுள்ளார். சாகப் போகும் வயதில் நீ செத்து விடுவாய். உன்னை சார்ந்த குற்றத்திற்காக உன் உறவுகள் பழிப்பெயரை சுமந்து கொண்டு வாழ வேண்டுமா?? இதனால் ஏற்பட போகும் பின்விளைவுகளை அறிய முடியாத, உணர முடியாத வயது உமக்கில்லை.

பெற்றோர்களே!! ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!! உங்கள் பிள்ளைகள் சந்தோசமாக வாழ பணம் தேவைதான். அது நல்லவழியில் சம்பாதித்த பணமாக இருக்க வேண்டும். கஞ்சா விற்று ,ஏமாற்றி ,சீரழித்து பெற்ற பணம் மூலம் ஒரிரு நாடகள் வேண்டும் என்றால் நீங்கள் சந்தோசத்தை உணரலாம்.ஆனால் அடுத்தவர் வேதனை உங்களை நிம்மதியாக வாழ விடாது.

பெண்களை பொறுத்தவரை பலர் அப்பாவிகள், மூடத்தனமாக நம்பிக்கை வைத்து ஏமாந்து வாழ்க்கையை தொலைப்பவர்களே இன்று அதிகம். தொழில் நுட்ப வளர்ச்சியை உங்களிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டுமே தவிர கெட்டுப்போக பயன்படுத்தாதீர்கள். எத்தாக்கத்திற்கும் ஒரு எதிர் தாக்கம் இருக்கும் என்பதை நீங்கள் மறக்கக் கூடாது.

ஒரு பெண் தானாக கெட்டு போவதில்லை. இதற்கு அவளின் அறியாமை, தெளிவின்மை, அபரீத நம்பிக்கை என பல காரணங்கள் கூறிக்கொண்டே போகலாம். காதலிற்கும் காமத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்பதை பெண்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பெண் தவறான பாதையில் சென்றுவிட்டாள் என்றவுடன் இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது பெற்றோரை மட்டும் நாங்கள் குற்றவாளிகளாக்கி விட முடியாது. சமூக பொறுப்புள்ள எங்கள் மீதும் கடமை இருக்கின்றது.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை , சமூகத்தை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்,

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன SMS வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவறுவதற்கு இடமளிப்பது

6.வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஷ்டப்படி உரிய கண்காணிப்பின்றி வாழ அனுமதிப்பது.

7. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக புடவை கடை, நகைக்கடை என கடைத்தெருவுக்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்,

1. அந்நிய ஆணுடன் பழகுவதும், புகைப்படங்கள் எடுப்பதுவும் எல்லை மீறாத வகையில் இருக்க வேண்டும் என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க வேண்டாம்.

7.தெரியாத அல்லது அறிமுகமற்ற எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும்,பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள்,அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூண்டிலை வீசுகின்றார்கள்என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதுடன் எமது ஊடகத்திற்கும் இத்தகவலிற்கும் சம்பந்தமில்லை என்பதையும் அறியத்தருகிறோம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like