யாழில் வீங்கிய வயிற்றை வெட்டிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்!

வயிறு வீங்கி வயிற்றுவலி அதிகமானதால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் தனது வயிற்றை பிளேட்டால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவம் அண்மையிால் வெளியாகியது.

இந்த நிலையில் அவ்வாறு வெட்டிய குடும்பத் தலைவர் சிகிச்சை பயனின்றி பத்து நாள்களின் பின்னர் உயிரிழந்தார்.மிருசுவில் தவசிக்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை ஞானச்சந்திரன் (வயது 55) என்பவருக்கு முகம் மற்றும் கை கால் வயிறு போன்றவை வீங்கின.

சிகிச்சை பெற்ற போதிலும் வீக்கம் குணமாகவில்லை. வீக்கத்துடன் வலியும் அதிகமாகியது.இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான குடும்பத் தலைவர் தவறான முடிவெடுத்து கடந்த 23ஆம் திகதி பிளேட்டால் வயிற்றின் 3 இடங்களில் வெட்டியுள்ளார்.உடனடியாக சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like