இலங்கையில் கோர விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவன்!

காலி – மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் உடுகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு விபத்திற்கு உள்ளகரியுள்ளவர் காலி – மெதகம – கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் பாதசாரி கடவை ஊடாக கவனயீனமின்றி வீதியின் மறுபுறம் செல்ல முற்பட்ட வேளை மொரவக திசையில் இருந்து நெலுவ திசை நோக்கி பயணித்த வேனில் மோதுண்டுள்ளார்.

விபத்து தொடர்பில் நெலுவ காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.இந்த விபத்து வீதியின் அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like