யாழ்ப்பாணம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்…!!

வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்டை தீவு கடற்கரையை சிறந்த சுற்றுலாமையமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடக்கப்பட்டுள்ளது.

அதற்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபையின் செயலர் தெரிவித்தார்.

வேலணை பிரதேச சபையின் சிறப்பு அமர்வு தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தெரிவிக்கப்பட்டதாவது, வேலணை பிரதேச சபைக்கு உற்பட்ட கடற்கரைகளை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்பட்டது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதனை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு தற்போது மாவட்டச் செயலகத்தால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்டை தீவு கடற்கரையை அபிவிருத்தி செய்வதற்கு 27 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் 23 மில்லியன் ரூபா வேலைக்கான கேள்வி கோரல் தற்போது நடைபெற்றுள்ளது.

அதே போன்று சாட்டி கரையை அபிவிருத்தி செய்வதற்கு 10 மில்லியன் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like