ஒரு குடும்பத்தை பல வருடங்களின் பின் இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய பேஸ்புக்!

8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இந்தியா தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது,

தெலுங்கானாவில் கடந்த 2011ம் ஆண்டு 8 வயதான தனது மகன் தினேஷ் ஜனா காணாமல் போனதாக தாய் சுசானா குஷாய்குடா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனால், எந்த பயனும் இல்லை. தினேஷ், காணாமல் போய் 8 ஆண்டுகள் ஆன நிலையில், சுசானா தனது பேஸ்புக் கணக்கில் தினேஷ் ஜனா, தினேஷ் ஜனா லிமா எனும் பெயர்களைக் கொண்டு தேடியுள்ளார். அப்போது அவரது மகனின் புகைப்படத்தை பார்த்தார்.

அளவுகடந்த மகிழ்ச்சியுடன், உடனடியாக ரசகொண்டா பகுதியில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினார். அங்குள்ள போலீசார் அந்த பேஸ்புக் கணக்கின் ஐபி எண்ணை கொண்டு தினேஷ் , பஞ்சாப்பின் அம்ரித்சார் மாவட்டத்தில் உள்ள ரனகலா கிராமத்தில் வசிப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் ஒரு குழுவாக பஞ்சாப் சென்று, தினேஷை மீட்டு நேற்று தாயிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தை இணையவாசிகள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.