இன்றைய ராசிபலன் 03-03-2018

மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். இன்று தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மாலையில் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: இன்று எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடவேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையைக் கேட்டுக்கொள்வார்கள். உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை.அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

மிதுனம்: புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். குடும்பத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவிக்கு இடையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தேவையான பணம் இருந்தாலும், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கடகம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம்ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சியைத் தவிர்க்கவும். தேவையற்ற மனக்குழப்பம் ஏற்பட்டாலும், பிற்பகலுக்கு மேல் குழப்பம் நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதையும் இன்று எடுக்கவேண்டாம்.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் உங்கள் பணிகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வழியில் சுபச்செலவு ஏற்படக்கூடும்.

கன்னி: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும்.கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

துலாம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படக்கூடும். சகோதரர்களால் ஆதாயமும் இருக்கும்; அலைச்சலும் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் சிறு சங்கடம் ஏற்படலாம். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்: அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சி சாதகமாக முடியும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும். சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணம் தவிர்க்கவும்.

மகரம்: உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

கும்பம்: இன்று மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் கடிந்துகொள்ளாதீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணை உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மீனம்: புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.