தேடிவரப்போகும் ராஜயோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எவ்வளவு வேலை சுமையை உங்கள் தலையில் இறக்கினாலும், தன்னம்பிக்கையோடு அதை செய்தே முடிப்பேன் என்ற குறிக்கோளை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். அதில் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாமியார் மருமகள் உறவு சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பிரச்சினை வந்தாலும் சரி, தோல்விகள் ஏற்பட்டாலும் சரி, நீங்கள் மனசு தளர விடக்கூடாது. தைரியமாக இருக்க வேண்டும். இன்றைய தோல்வி வெற்றிக்கான முதல் படி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நிறைய அனுபவ பாடங்கள் கிடைக்கும். ஆகவே உங்களுடைய மனதை உறுதியோடு வைத்துக் கொள்ள இஷ்ட தெய்வ வழிபாடு குலதெய்வ வழிபாட்டை இன்று மேற்கொள்ளவும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. காலையிலேயே பிரச்சனை தொடங்கி விட்டால் யாராவது ஒருவர் வாயை மூடிக் கொள்ளுங்கள். பிரச்சனை தானாக சரியாகிவிடும். பிரச்சனை சரியாவது போல தெரியவில்லை என்றால், சாரி என்ற ஒரு வார்த்தையை சொல்லி விடுங்கள். எல்லா பிரச்சனையும் சரியாகி இந்த நாள் இனிய நாளாக மாறிவிடும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எப்படி யாவது இந்த விஷயத்தை சாதித்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் வைத்திருப்பீர்கள். உங்களுடைய விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும். மனம் தளராமல் உழையுங்கள். வருமானத்தை இரட்டிப்பாக்க நிறைய வழிகள் வரும். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம் முன்னேறலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சந்தோஷம் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பதட்டமான நாளாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் முழு திருப்தி இருக்காது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும். அடுத்தவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீங்க. உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். பேருந்தில், ஆட்டோவில் பயணம் செல்பவர்கள் உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளவும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கஷ்டங்களை எல்லாம் தூக்கிப் போடக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் மன அழுத்தத்தை கொடுத்துக் கொண்டே இருந்த ஒரு பிரச்சினையை பேசி சரி செய்வீர்கள். மனது ரிலாக்ஸ் ஆகும். இரவு நல்ல தூக்கம் வரும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். தொழிலில் எதிர்பாராத வெற்றிக்கான வாய்ப்புகள் உண்டு. சின்ன சின்ன வியாபாரிகளுக்கும் இன்று நல்லது நடக்கும். வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கை உயர்ந்த பாதையை நோக்கி செல்லும். உங்களுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொண்டு உயர் பதவி கொடுக்க மேலதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு பதவி வேண்டாம், பட்டம் வேண்டாம் முன்னேற்றம் வேண்டாம் என்று சொல்லாதீங்க. அதிர்ஷ்ட காற்று ஒருமுறைதான் கதவை தட்டும். பயந்து நீங்கள் பின்னுக்கு வந்து விட்டால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு சென்றுவிடும். இன்று கொஞ்சம் கவனமா இருங்க.

விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வேலை சுமை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். சின்ன சின்ன திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை கூட அமையும். ஆனால் நீங்கள் முன்கோபடக்கூடாது. வேலையை எப்படி முடிப்பது என்பதில்தான் ஆர்வம் காட்ட வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசாதீங்க எல்லா சமயமும் ஒரே போல இருக்காது அல்லவா‌. ஏற்ற இறக்கங்கள் வரும்போது வாழ்க்கையை சகித்துக் கொண்டு வாழ்பவனுக்கு தான் வெற்றி கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக பிரச்சனை கொடுத்து வந்த எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட நேரடியாக போய் சண்டை போட்டுடுவிங்க. எதுவாக இருந்தாலும் இன்று ஒரு முடிவு காண வேண்டும் என்று துணிச்சல் செயல்பட்டு, அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலை நேரத்தில் அரட்டை அடிக்காதீங்க. அலுவலகத்தில் ஒருவரை பற்றி இன்னொருவரிடம் புறம் பேசாதீர்கள். அது உங்களுக்கு பிரச்சனையை தரும் ஜாக்கிரதை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக தான் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்ற தடுமாற்றம் சில பேருக்கு வரும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். முடிவு எடுக்கக் கூடிய வேலையை நாளை தள்ளிப் போடுங்கள். பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். அடம் பிடித்து எந்த விஷயத்தையும் சாதிக்கக்கூடாது. பெரிய அளவில் காசு செலவு செய்து எந்த பொருளையும் வாங்காதீங்க.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். எதையோ நினைத்து பகல் கனவு காண்பீர்கள். ஆனால் அதெல்லாம் நடக்குமா என்று தெரியாது. இருந்தாலும் உங்கள் சிந்தனை இன்று மேலோங்கி இருக்கும். கவலைப்படாதீங்க, கனவை நினைவாக்க வேண்டும் என்றால் அயராது உழைக்க வேண்டும். வெறும் வாயால் இன்று வடை சுடாதீங்க. யாருக்கும் வாக்கும் கொடுக்காதீங்க. குருட்டுத்தனமா அதிர்ஷ்டம் உங்களுக்கு இன்று கட்டாயம் அடிக்காது. வேலையை ஒழுங்கா செய்யணும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். சேமிப்புக்கு உண்டான சில வழிமுறைகளை மேற்கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் அவ்வளவாக பிரஷர் இருக்காது. மேனேஜர், டீம் லீடர் எல்லாம் உங்களை பற்றி நன்றாக புரிந்து கொள்வார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குறிப்பாக கமிஷன் வேளையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். மனசு சந்தோசம் அடையும்.