வக்ரமாகும் குரு! பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! – இன்றைய ராசிபலன்

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கும். எந்த இடத்தில் சென்றாலும் உங்களுக்கு தான் முதல் மரியாதை கிடைக்கும். இந்த நாளை சந்தோஷமாக கடந்து செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். உங்களை பார்த்து பொறாமைப்படுபவர்களை சமாளிப்பதில் கொஞ்சம் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். அதை எல்லாம் நீங்கதான் உங்க திறமையை வைத்து சரி கட்டணும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று நண்பர்களோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். குறிப்பாக நடுத்தர வயதை கடத்தவர்கள், அதாவது 40 வயதை கொண்டவர்கள் உங்களுடைய பழைய நண்பர்களோடு சேர்ந்து பழைய கதைகளை பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனசு சந்தோஷமடையும். மற்றபடி சிறு வயது உடையவர்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் அவரவருடைய வேலையில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த முயற்சியையும் செய்யக்கூடாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் அதிரடியாக காலை வைக்க மாட்டீங்க. ஒரு விஷயத்தை ஒன்றுக்கு பலமுறை சிந்தித்தாலும், அந்த விஷயத்தில் சரியான முடிவை உங்களால் எடுக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் போன்ற பதவி உயர்வு சம்பந்தப்பட்ட பேச்சுகள் நடந்தாலும் அந்த இடத்தில் வெளிப்படையாக உங்களால் பேச முடியாது. புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். எந்த ஒரு வேலையையும் நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக தான் இருக்க போகின்றது. இருந்தாலும் உங்களுடைய குழப்பத்தை தெளிவை வைக்க உறவுகளும் நண்பர்களும் இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அனுசரணையான பேச்சு மனதிற்கு இதமாக இருக்கும். எதையும் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். முயற்சிகளை கைவிடாதீர்கள். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நண்பர்களோடு நல்லவிதமாக பழகுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்பது நல்லது. புதிய வேலை தேடும் முயற்சி செய்ய வேண்டாம். இருக்கின்ற வேலையை சரியாக செய்தாலே உங்களுக்கு நல்லது நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருந்து கிளம்பும்போதே உஷாராக இருக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்பவர்கள், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் எல்லாம் உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை அதிக பணத்தை இன்று கையில் வைத்துக் கொள்ள வேண்டாம். விலை உயர்ந்த நகைகளை அணிந்து செல்ல வேண்டாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நிறைய நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும். தடைப்பட்டு வந்த சுபகாரியை பேச்சுகள் நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவருவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். இரவில் நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டிகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் உறவுகளுக்குள்ளேயே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். சகோதர சகோதரிக்குள், நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற சண்டை வரலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிகமாக முன்னுரிமை கிடைத்தால், அதை தடுப்பதற்கும் நான்கு பேர் வருவாங்க. இவர்களையெல்லாம் சமாளிக்கவே இன்றைய நாள் சரியா போகப் போகின்றது. கொஞ்சம் சிரமம் தான் அனுசரித்து செல்லுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவு கொஞ்சம் கையை கடிக்கும். சம்பளம் எல்லாம் செலவாகி முடிந்திருக்கும். இனி வரக்கூடிய நாட்களை எப்படி கடத்திச் செல்வது என்ற யோசனை சில பேருக்கு டென்ஷனை உண்டாக்கும். கவலைப்படாதீங்க. உங்களுக்கான நல்லதை அந்த கடவுள் காண்பித்துக் கொடுப்பான். முயற்சிகளை கைவிடாதீர்கள். கூடுமானவரை அனாவசிய செலவை குறைத்துக் கொள்வது நல்லது. அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனசு குழப்பமாகவே இருக்கும். ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி உங்களுடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கும். யாரிடமாவது சண்டை போட்டு இருந்தால், யாருக்காவது துரோகம் செய்திருந்தால் அவர்களிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்டு விடுங்கள். தவறு கிடையாது. செய்த தவறுக்கு உண்டான பிரயாச்சிட்டத்தை தேடி கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு எப்போதும் அதையே நினைத்து மனசை போட்டு குழப்பிக் கொள்வது நல்லது அல்ல. உங்களுடைய வேலையும் கெடும் பாத்துக்கோங்க.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நெருக்கடியான நாளாக இருக்கும். கொஞ்சம் செலவுகளை சமாளிக்க சிக்கல்கள் உண்டாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒரு புரிதல் இல்லாமல் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற நாசுக்கான சில விஷயங்களை கற்றுக் கொண்டால் தான் உங்கள் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். செலவை சமாளிப்பதற்கு உண்டான நிதி வசதி தானாக கிடைக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். ஆனால் இந்த சமயத்தில் தான் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். செலவை கட்டுப்படுத்துவதன் மூலமாகத்தான் மாதம் முழுவதும் உங்களால் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும். ஒரே நாளில் அதிக காசு செலவு செய்யும் பழக்கத்தை தவிர்த்துக் கொள்ளவும்.