கட்டிப்பிடித்தால் தப்பா ? நாங்கள் அப்படித்தான் செய்வோம் ?., புதிய முறையில் போராட்டம் செய்த மாணவர்கள்..!

சென்னை: ஆண், பெண் நட்பை சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் கொச்சைப்படுத்துவதாக கூறி மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஐஐடியில் மாணவ-மாணவிகள் பாலின வேறுபாடு மறந்து பழகுவது வழக்கம். சமீபத்தில் மாணவன் ஒருவர் தனது தோழியை கேண்டீனில், கட்டிபிடித்து வழியனுப்பி வைத்தபோது, அதை ஆய்வக அலுவலர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். மேலும் இது தவறு இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள கூடாது என அவர் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

இது குறித்து மாணவர்கள் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் ஐ.ஐ.டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே நிர்வாகத்தின் அணுகுமுறையை கண்டித்து ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் கட்டிபிடித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்தக் கலாச்சாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை என கூறியுள்ளனர்

அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லாதீர்கள், இரவு வெளியே போக வந்து கேட்டால் யாரையும் வெளியில் விடாதீர்கள் என்று நிர்வாகம் அறிவுறுத்துவதாக மாணவர்கள் கூறியுனர். இதனால் ஐ.ஐ.டி வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.