மதுபோதையில் இருந்த தாயைக் கொலை செய்த மகன்!

மதுபோதையில் இருந்த தாயை தாக்கிக்கொன்ற மகனை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை ஷெனாய்நகரைச் சேர்ந்த கலாவதி என்பவர் மதுப்பழக்கம் உடையவர் என்றும், இன்று இவர் மது அருந்திவிட்டு தனது வீட்டுக்கு வெளியே தரையில் கிடந்ததாகவும் தெரவிக்கப்படுகிறது.

அப்போது அங்கு வந்த அவரது மகன் நீலகண்டனும் குடிபோதையில் இருந்ததாகவும் எனினும் தாயை தண்ணீர் தெளித்து எழுப்பி வீட்டுக்குள் படுக்கச் செய்துவிட்டு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை அவர் மீண்டும் திரும்பி வந்தபோது கலாவதி வீட்டில் இருந்த மதுபானத்தைப் குடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வெளியே மயங்கிக் கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட மகன் ஆத்திரமடைந்து தாயை எழுப்பி சண்டையிட்டதாகவும் தெரிகிறது.

வாக்குவாதம் முற்றியதையடுத்து தாயை சுவற்றின் மீது பிடித்து தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கலாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அயலவர்கள் நீலகண்டனை அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like