இன்றைய ராசிபலன் 27-03-2018

மேஷம்: பொறுமையுடன் செயல்படுவது அவசியம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பம் சம்பந்தப்பட்ட எந்த முடிவையும் இன்று எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். இன்று புதிய முயற்சிகளைத் துவங்குவது சாதகமாக முடியும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும் என்றாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதால், மனநிம்மதி குறையும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்பதால், எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்: உற்சாகமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சகோதரர்கள் வழியில் பணவரவு இருக்கும். குடும்பத்துடன் விருந்தினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்புடன் பணிகளை முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களின் பேச்சுத்திறமையால் விற்பனை அதிகரிக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களுடன் பேசும்போது கவனத்துடன் பேசுவது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.

கன்னி: எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும்.

துலாம்: தொடங்கும் காரியம் நல்லபடியாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை அமோகமாக இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்: காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனை சற்று குறைவாகத்தான் இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு: கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். உடல்நலனில் அக்கறை அவசியம். சிறிய அளவு உடல்நலக் குறைப்பாடு ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. நண்பர்களிடம் விரோதம் ஏற்படும். வெளியூர்ப் பயணத்தின்போது கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களைப் பற்றி தேவையில்லாத விமர்சனம் எழக்கூடும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்: தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் ஏற்படும் நெருக்கடியை சமயோசிதமாகச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பம்: தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

மீனம்: இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like