தங்கை பட்ட வேதனையை பார்க்க முடியவில்லை: குழந்தைகளை கொலை செய்த தாய்மாமா உருக்கம்

இந்தியாவில் மனவளர்ச்சி குன்றிய இரண்டு குழந்தைகளை தங்கை வளர்க்க சிரமப்பட்டதால், அதை என்னால் பார்க்க முடியாத காரணத்தினால் கொலை செய்ததாக மாமா உருக்கமாக கூறியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ரெட்டி. இவருக்கு லட்சுமி என்ற சகோதரி உள்ளார்.

லட்சுமிக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதால், இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவருக்கும் இரட்டை குழந்தைகளான ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும் போதே குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய நிலையிலே பிறந்துள்ளனர்.

இருப்பினும் ஆண் குழந்தைக்கு விஷ்ணுவர்தன் ரெட்டி(12) எனவும், பெண் குழந்தைக்கு சிறீஜனா ரெட்டி(12) என்றும் பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர்.

குழந்தைகளாக இருக்கும் போதே இருவரையும் வளர்ப்பதற்கு லட்சுமி மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வந்துள்ளார்.

தனது தங்கைக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் மனவளர்ச்சி குன்றி பிறந்துவிட்டதாலும், அதை வளர்ப்பதற்கு அவள் படும் பாட்டை பார்க்க முடியாமல் மல்லிகார்ஜுன ரெட்டி மிகுந்த வேதனையடைந்துள்ளார்.

இரண்டு குழந்தைகளும் தற்போது 12 வயது அடைந்துவிட்டதால், அவர்களை வளர்ப்பதிலும், வெளியில் அழைத்துச் செல்வதிலும் லட்சுமியும், அவரது கணவரும் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இதை பார்த்து வந்த மல்லிகார்ஜுன ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள தங்கையின் வீட்டுக்குச் சென்று விஷ்ணுவர்தன் ரெட்டிக்கும், சிறீஜனா ரெட்டிக்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க அழைத்துச் செல்வதாகக் கூறி தனது காரில் நல்கொண்டாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லிக் கொடுக்காமல், மனவளர்ச்சி குன்றிய இந்த இரு பிள்ளைகளையும் வளர்க்க தனது தங்கை அடையும் வேதனையை எண்ணி, மனவேதனையுடனே இருந்துள்ளார்.

அதன் பின் இதற்கு என்ன வழி என்று யோசித்த பின்பு, இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like