வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் அசத்தலான10 குறிப்புகள்!

கோடைக் காலத்தில் உடல் உஷ்ணம் ஆகாமல், குளுமையாக வைத்துக் கொள்ள உதவும் ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகள் பற்றி இங்கு காணலாம்.

வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும். இதனால் உடலில் நீர்வறட்சி உண்டாகி, உடல் சோர்வு அதிகரிக்கும். மேலும், இதன் காரணத்தால் உங்கள் செயற்திறன் மற்றும் ஆரோக்கியம் வெகுவாக குறைந்து காணப்படும். இந்த வகை உடல் உஷ்ணத்தில் இருந்து உங்கள் உடலை காப்பாற்றிக் கொள்ள உதவும் சிறந்த பத்து ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் பற்றி இங்கு காணலாம்…

#1 மாதுளை பழசாற்றுடன் கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் உடல் குளுமையாகும்.

#2 நொச்சி இலைகளாய் பனை வெல்லத்துடன் சேர்த்து இரண்டு டம்ளர் நீருடன் நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#3 செவ்வந்திப்பூ கசாயம் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#4 விளக்கெண்ணையுடன் துண்டுதுண்டாக அறுத்த பேயன் வாழைப்பழம் மற்றும் பனகற்கண்டு சேர்த்து, நன்கு ஊறிய பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#5 கள்ளிமுளையான் தண்டுப்பகுதியை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு குளிர்ச்சி அடையும்.

#6 சாதம் வடித்த கஞ்சியுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#7 செம்பருத்தி, சீரகம், நெல்லிவற்றலுடன் நீர் சேர்த்து இரவு முழுதும் ஊற வைத்து, பிறகு அடுத்த நாள் அந்த நீரை குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

#8 வெந்தயத்தை வறுத்து, வறுத்த கோதுமை சேர்த்து பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#9 தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

#10 ஜாதிக்காய் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like