அடிக்கடி கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த நோய் அபாயம் உறுதி

பொதுவாகவே ஆண்களும் சரி பெண்களும் சரி அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். தங்களை அழகுப்படுத்திக்கொள்ள விருப்பமில்லாதவர்கள் தங்களின் மீது காதல் அற்றவர்கள் என்றே கூற வேண்டும்.

ஆனால் சிலர் தங்களை முழுமையாக அழகுப்படுத்திக்கொண்டு தயார் ஆன பின்னரும் அடிக்கடி கண்ணாடி முன் நின்று மீண்டும் மீண்டும் தங்களின் உடைகளையும் தங்களின் ஒப்பனைகளையும் சரிபடுத்ததிய படியே இருப்பார்கள்.

இன்னும் சிலர் அடிக்கடி கண்ணாடி முன் நின்று தங்களின் வெவ்வேறு தோரனைகளை சரித்த வண்ணம் இருப்பார்கள். இவ்வாறு கண்ணாடியில் உங்களை அடிக்கடி பார்க்கும் பழக்கம் இருப்பது ஒரு நோய் அறிகுறி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அடிக்கடி கண்ணாடி பார்ப்பது நோயா?
இப்படி நீண்ட நேரம் கண்ணாடி முன் நேரத்தை செலவிடும் பழக்கம் இருந்தால் நிச்சயம் இது ஒரு நோயின் அறிகுறி.

உண்மையில், மீண்டும் மீண்டும் கண்ணாடியில் பார்ப்பது ஒரு நோயாகவே கருதப்படுகின்றது. அறிவியல் மொழியில் இந்த நோய் ‘Body Dysmorphic Disorder’ என குறிப்பிடப்படுகின்றது.

மருத்துவர்களின் கருத்துபடி இந்த நோயின் அறிகுறிகள் வெறித்தனமான கட்டாயக் கோளாறு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமே அதிகமாக தோன்றும்.

இந்த நோயின் பாதிப்பில் உள்ளவர்கள் தங்களின் தோற்றம் குறித்து இலகுவில் திருப்பதியடைய டாட்டார்கள்.மேலும் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதனால்தான் கண்ணாடி முன் தங்களைப் அடிக்கடி பார்கின்றனர்.

‘Body Dysmorphic Disorder உள்ளவர்கள், கண்ணாடியின் முன் நின்று தங்கள் தோரணையை வெவ்வேறு முறைகளில் மாற்றி பார்த்து திருப்தியடைகின்றனர்.

பார்ப்பவர்களுக்கு இது ஒரு மன நோய் போன்று தோன்றலாம். ஆனால் அவ்வாறு கூறிவிட முடியாது. பொதுவாகவே தாழ்வு மனபான்மை அதிகமாக இருப்பவர்களும் கூட அடிக்கடி கண்ணாடி பார்க்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.

முக்கியமான தங்களின் அழகில் திருப்தியடையாதவர்கள் தான் இவர்கள். இந்த கோளாறு ஏற்படுவதற்கு வயது வித்தியாசம் கிடையாது. எந்த வயதிலும் இந்த பிரச்சினையுடையவர்கள் இருக்கின்றனர்.

இந்த நோயின் அறிகுறிகள் ஆண்களை விட பெண்களில் அதிகம் ஏற்படுவதாகவும் பதின்வயதினர் பருத்தினரில் இந்த பிரச்சினை அதிகமாக ஏற்படுவதாகவும் ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.