இன்றைய ராசிபலன் 09-09-2018

மேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்கக் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்: மகிழ்ச்சியான நாளாக அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

கடகம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்மம்: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கன்னி: வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்: அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்: தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

தனுசு: இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மகரம்: உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படக்கூடும்.

கும்பம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் யோசனை குடும்பத்தினரால் பாராட்டப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

மீனம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மாலையில் உறவினர் அல்லது நண்பர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் மனதில் உற்சாகமும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.