இன்றைய ராசிபலன் 01-11-2018

மேஷம்: இன்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவேண்டாம். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். அதிகாரிகளால் சில சலுகைகளும் கிடைக்கும். சக பணியாளர்களின் பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

கடகம்: சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். உறவினர்களுடன் பேசும்போது வீண் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

சிம்மம்: உற்சாகமான நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாகத் தேடிய பொருள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கன்னி: மனதில் தைரியம் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரி களின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

துலாம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

விருச்சிகம்: காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

தனுசு: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு தேவையற்ற வீண்செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும் சோர்வும் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

மகரம்: எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப் படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்துவேறு பாடு நீங்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும். கவனம் தேவை.

கும்பம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிப்பீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்: உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பம் தொடர்பான எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.