இன்றைய ராசி பலன் 08.12.2018

08-12-2018 சனிக்கிழமை விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 22-ம் நாள்.

வளர்பிறை. பிரதமை திதி பிற்பகல் 2.04 மணி வரை பிறகு துவிதியை. கேட்டை நட்சத்திரம் காலை 6.40 மணி வரை பிறகு மூலம். யோகம்: சித்தயோகம்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மாலை மணி 1.30-3.00
இராகு காலம் காலை மணி 9.00-10.30
குளிகை: 6:00 – 7:30.
சூலம்: கிழக்கு.

பொது: சகல விஷ்ணுவாலயங்களிலும் பகற்பத்து உற்சவாரம்பம், மதுரை தெற்கு வாசல் முகையதீன் ஆண்டவர் கொடியேற்றம்.
பரிகாரம்: தயிர்.மேஷம்:

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

ரிஷபம்:

சந்திராஷ்டமம் தொடங்குவதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள்.வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்:

உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்:

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம்:

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கன்னி:

தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

துலாம்:

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்:

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு:

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும்.உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மகரம்:

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

கும்பம்:

எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடை வார்கள். பிரபலங்கள் உதவுவார்கள்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந் தன்மை யுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மீனம்:

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.