நெஞ்செரிச்சலா? இதை ட்ரை பண்ணுங்க…

நம்முடைய உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்த நாட்களிலிருந்து பல உடல்நல பிரச்சனைகள் மனிதர்களை வாட்டி வதைக்கிறது. அதிலும், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏராளம்.

அதிலும் பெரும்பாலானோருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கிறது. இதற்கு சில தீர்வுகளை காண்போம்.

சீரகம்: சீரகம் இரைப்பையில் அமில சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் சீரகம் ஊற வைத்த நீரை குடித்து வாந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அரிசி: அரிசி உணவுகள் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. ஒரு நாளில் ஒரு வேளை உணவாவது அரிசி உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.

வாழைப்பழம்: நெஞ்செரிச்சலை உடனடியாக குறைக்க வாழைப்பழம் சாப்பிடலா. வாழைப்பழத்திற்கு இயற்கையாகவே அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் உடனடி நிவாரணத்தை இது அளிக்கும்.

இஞ்சி: இஞ்சி அமில சுரப்பை கட்டுப்படுத்துகிறது. அதோடு உணவு செரிமானத்திற்கு உதவுவதால் நெஞ்செரிச்சல் குறைந்திடும்.

ஓட்ஸ்: ஓட்ஸில் குறைந்தளவிலான அமிலம் உள்ளது. நெஞ்செரிச்சல் ஏற்ப்பட்டு எந்த உணவினையும் சாப்பிட முடியாமல் இருந்தால் பயமின்றி ஓட்ஸ் சாப்பிடலாம்.

இளநீர்: இளநீர் உடலை குளர்ச்சியடைய செய்திடும். இதிலிருக்கும் பொட்டாசியம் அமிலச்சுரப்பை கட்டுப்படுத்துகிறது. உடனடி பலன்களும் கிடைக்கும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like