வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா?

வாய் புண் வைட்டமின் சி குறைவால் ஏற்படுகிறது .வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் குடிக்காலம். வெது வெதுப்பான தண்ணீரில் சிறதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிக்க்கலாம். இது வாய் புண் சீக்கிரம் குணமாக உதவுகிறது.

மீன், இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலில் அமில தன்மையை அதிகபடுத்துகிறது இதனால் வாய் புண் குணப்படுத்துவதும் தாமதமாகி விடுகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறு மஞ்சள் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்று மற்றும் வாய் புண் குணமடையும். புதினா இலையை அரைத்து அதன் சாற்றை தடவினால் வலி மற்றும் எரிச்சல் குணமாகும்.

சூட்டை தணிக்க இளநீர் அருந்தலாம். புளிப்பு சுவையுடைய தயிர் ,மோர், உணவில் சேர்த்து கொள்ளலாம். துளசி இலைகளை கழுவி பின்னர் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

மணத்தக்காளியின் பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.

கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிவிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

தினமும் மூன்று வேலை கொய்யா இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் குணமாகும். வாழை பூ உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் மற்றும் வாய் புண் குணமாகும். அதிகமான காரம் சேர்த்துக் கொள்வது தவிர்க்க வேண்டும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like