இந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா?

வாழ்க்கையில் முடிவெடுக்கும் திறன் மட்டும் சரியாக இருந்துவிட்டால் அவர் வாழ்க்கையில் அதுதான் மிகப்பெரிய வரமாகும். ஏனெனில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பதே பெரும்பாலும் அனைவரின் வாழ்க்கையிலும் தோல்விக்கு காரணமாக அமைகிறது. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எடுக்கும் சரியான முடிவு உங்களை அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்றக்கூடும்.

இதில் துரதிர்ஷ்டமானது என்னவெனில் சரியாக முடிவெடுக்கும் ஆற்றல் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் கிடைத்துவிடாது. இது சிலருக்கு அனுபவங்கள் மூலமாகவோ அல்லது பிறவியிலிருந்தோ கிடைக்கலாம். ஆனால் சிலருக்கு தவறான முடிவெடுப்பதே வழக்கமாக இருக்கும், அதற்கு அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும் தவறான முடிவையே எடுப்பார்கள் என்று பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எதுவாக இருந்தாலும் விரைவாக முடிக்க வேண்டுமென்று நினைப்பார்கள், அதிகமாக திட்டமிடுவது முட்டாள்தனம் என்று நினைப்பவர்கள் இவர்கள். இவர்கள் அனைத்து விஷயத்திலும் விரைவாக முடிவெடுப்பார்கள் குறிப்பாக பயணம் செய்வதில் ஏனெனில் அவர்கள் எதையும் தவறவிட விரும்பமாட்டார்கள்.

அவர்கள் சிறிது யோசித்து பார்த்தாலே அவர்கள் முடிவில் இருக்கும் தவறுகள் அவர்களுக்கு எளிதாக தெரிந்துவிடும். அவர்கள் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவதாலேயே இவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாக செல்ல வாய்ப்புள்ளது. தான் தேர்ந்தெடுப்பது சரியாகத்தான் இருக்கும் என்ற அதீத தன்னம்பிக்கையே இவர்களின் முடிவை கெடுத்துவிடும்.

மகரம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் எதார்த்தமானவர்கள், கடினமாக உழைக்க கூடியவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் எனவே சரியாக முடிவெடுப்பீர்கள் என்று நினைப்பீர்கள் ஆனால் அது உண்மையல்ல. மகர ராசிக்காரர்கள் தான் கவனமாக இருக்க வேண்டுமென்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நன்கு அறிவார்கள்.

ஆனால் இவர்கள் பெரும்பாலும் அவசரப்பட்டே முடிவுகளை எடுப்பார்கள். குறிப்பாக உறவுகளிலும், பாலியல் தொடர்பாகவும் இவர்கள் எப்பொழுதும் அவசரப்பட்டே முடிவுகளை எடுக்கிறார்கள். இவர்கள் என்ன தவறான முடிவை எடுக்கிறோம் என்று நன்கு அறிவார்கள் அதனை மீண்டும் செய்ய இவர்கள் எப்போதும் முயலமாட்டார்கள்.

மேஷம்
மகர ராசிக்காரர்களுக்கு அவசரமாக முடிவெடுப்பது என்பது அவர்களின் வெளிப்புற பழக்கமாக இருக்கலாம், ஆனால் மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை அவசரமாக முடிவெடுப்பது என்பது அவர்களின் பிறவி குணங்களில் ஒன்றாகும். இவர்களுக்கு பொறுமை என்பதே இருக்காது. பொறுமையின்மையும், ஆபத்தை எதிர்கொள்ளும் குணமும் மிகவும் மோசமான குணங்கள்.

துரதிர்ஷ்டவசமாக இது இரண்டுமே இவர்களிடம் இருக்கிறது. இதுவே இவர்களின் முடிவை தவறானதாக மாற்றுகிறது. தன்னுடைய முடிவால் என்ன விளைவு ஏற்படும் என்று சிந்திக்க அவர்கள் நேரம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எதனால் தங்கள் முடிவு தவறானது என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டுமெனில் அதன் விளைவு மிகவும் மோசமானதாக இருக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசி எப்பொழுதுமே இரட்டையர்களின் அடையாளமாக இருக்கிறது, சின்னம் போலவே இவர்களின் மனதும் எப்பொழுதும் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கும். முடிவெடுக்க நேரத்தை வீணாக்குவது இவர்கள் வெறுக்கும் ஒரு செயலாகும், எனவே முடிந்தவரை தனக்கு தெரிந்த தகவல்களை கொண்டு இவர்கள் வேகமாக முடிவெடுக்கவே விரும்புவார்கள்.

அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறானவையாகத்தான் இருக்கும். இவர்கள் சரியான முடிவையே எடுத்தாலும் இவர்களின் இரட்டை நிலைப்பாடு அதனை செயல்படுத்த விடாது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் முடிவெடுப்பதில் அவசரம் காட்டமாட்டார்கள். ஏனெனில் அவசரப்பட்டு தவறான முடிவெடுத்து இவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும். அதனால் சுயமாக முடிவெடுப்பதை விட பிறரின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்க காத்திருப்பார்கள்.

இவர்கள் எடுப்பது சரியான முடிவாகவே இருந்தாலும் அதனை மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும்வரை செயல்படுத்த இவர்கள் துணியமாட்டார்கள். இதுவே பலசமயம் இவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும்.

கடகம்
நெருக்கடியான சூழ்நிலையில் கடக ராசிக்காரர்களை முடிவெடுக்க நிர்பந்தித்தால் அவர்களின் முடிவெடுக்கும் திறன் வெகுவாக பாதிக்கும். நெருக்கடியான சூழலில் முடிவெடுப்பது என்பது அனைவருக்குமே கடினமான ஒன்றாகும் அதுவும் கடக ராசிக்காரர்களுக்கு இது இயலாத காரியமாகும்.

அவர்களின் உணர்ச்சிகள் அவர்களின் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் பெரும்பாலும் தவறான முடிவுகளையே எடுப்பார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More