இரண்டு நாட்களில் கும்பத்தில் வக்கிரமடையும் சனி – அதிஷ்டத்தை அள்ளும் ராசியினர் யார் யார் தெரியுமா?

சனி பகவான் முக்கியமான கிரகமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறார். இவரின் நல்ல பார்வை ஒருவரை உயர்த்தும். அதுபோலவே வக்ர பார்வை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும்.

சனிபகவான் தற்போது அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார்.

வருகிற 29, 2024 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.29 மணிக்கு கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி பகவான், மீண்டும் நவம்பர் 15ஆம் தேதி வக்கிர நிவர்த்தி அடைந்து, நேர் கதியில் செல்லத் தொடங்குவார்.

இதனால் எந்த ராசியினருக்கு நல்ல அதிஷ்டம் அமையப் போகின்றது என்பது குறித்து பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு 11 ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் இந்த ராசியினர் நல்ல பணப் பலனை பெறுவார்கள். இது தவிர மரியாதை அதிகரிக்கும் தொழிலில் புதிய வாப்புகள் கிடைக்கும் மற்றும் உங்கள் அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப்படும்.

சிம்மம்
சனி பகவானின் வக்ர பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கு நல்ல பலனை வழங்கவுள்ளது. இதனால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். நிதி வாழ்க்கையில் வெற்றிக்கான வாய்ப்புகள் உருவாகும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திருமண வாழ்வில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அது தீரும்.

தனுசு
சனி பகவானின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு நல்ல பலனை வழங்கவுள்ளது. வேலையில் சிறந்த வாய்ப்பு கிடைக்கும். கடின உழைப்பால் பலன் நிச்சயம் கிடைக்கும். மரியாதையும் கூடும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். நிதி நிலைமை அதிகரிக்கும்.

மகரம்
சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மகர ராசியினருக்கு நல்ல பலனை வழங்கவுள்ளது. உங்களுடைய வருமானம் மற்றும் சேமிப்பு அதிகரிக்கும். சொத்து வாங்கினால் அது சாதகமானதாக அமையும். காதல் உறவுகளிலும் நன்மை பயக்கும். குடும்பத்துடன் உங்கள் உறவு நீடிக்கப்படும்.