சமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­திய 7 பேருக்கு நடந்தது என்ன.?

சமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­திய 7 பேருக்கு நடந்தது என்ன.?

மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­யத்தின் ஏறாவூர் கல்வி கோட்­டத்­தி­லுள்ள ஏறாவூர் றகு­மா­னிய்யா வித்­தி­யா­ல­யத்தின் அதி­ப­ரையும் பாட­சா­லை­யையும் சமூக வலைத்­த­ளங்­களில் மோச­மாக எழுதி வந்த ஏழு பேருக்கு எதி­ராக அப் ­பா­ட­சா­லையின் அதிபர் எம்.பி.எம்.ஏ.சக்கூர் ஏறாவூர் பொலிஸ் நிலை­யத்தில் திங்­கட்­கி­ழமை மாலை முறைப்­பாடு செய்­துள்ளார்.

அடை­யாளம் காணப்­பட்­டுள்ள ஏழு பேருக்கு எதி­ராக இம் முறைப்­பாட்டை செய்­துள்­ள­தாக பாட­சா­லையின் அதிபர் தெரி­வித்தார்.

கடந்த சில நாட்­க­ளாக இப் ­பா­ட­சா­லையின் அதி­ப­ரையும் பாட­சா­லை­யையும் தரக்­கு­றை­வாக சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் எழுதி வந்த நிலையில் திங்­கட்­கி­ழமை பாட­சா­லையின் ஆசி­ரி­யர்கள் சுக­வீன லீவு போராட்­ட­மொன்றில் ஈடு­பட்­டனர்.

பாட­சா­லையின் கல்வி நட­வ­டிக்­கையை சீர­ழிக்கும் வகையில் சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­துவதை கண்­டித்தும் பாட­சா­லையின் அதி­பரை இட­மாற்றம் செய்­ய­ வேண்­டு­மெனும் கோரிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்தும் இங்­குள்ள ஆசி­ரி­யர்கள் இந்த சுக­வீன விடு­முறை போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இதை­ய­டுத்து அங்கு சென்ற மட்­டக்­க­ளப்பு மத்தி வலயக் கல்­விப்­ ப­ணிப்­பாளர் ஏ.எல்.இஸ்­ஸதீன் இங்­குள்ள நிலை­மை­களை கேட்­ட­றிந்து கொண்­ட­துடன் அவர் வழங்­கிய வாக்­கு­று­தி­யி­னை­ய­டுத்து  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சுக­வீன விடு­முறை போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த ஆசி­ரியர் பாட­சா­லைக்கு சமூ­க­ம­ளித்­த­துடன் பாட­சாலை வழமை நிலைக்கு திரும்­பி­ய­தாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.