இந்த கிழமையில் பிறந்தவங்க பெரிய தலைவரா வருவாங்களாம்… நீங்க எப்போ பிறந்தீங்க?

வியாழன் என்றாலே அது குருபகவானைத் தான் குறிக்கும். வியாழக் கிழமை தான் அவருக்கு உகந்த தினமாக கூறப்படுகிறது. ஜோதிட கூற்றுப்படி வியாழன் கிரகமும் செல்வாக்கு உள்ள கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அதனால் தான் இந்த கிழமைகளில் பிறந்தவர்கள் கூட மிகவும் செல்வாக்கு உடையவர்களாக கருதப்படுகிறார்கள். சரி வாங்க அதைப் பற்றி மேலும் பார்க்கலாம்.

பெர்சனாலிட்டி
வியாழக்கிழமை பிறந்தவர்கள் ரொம்ப அறிவாளியாக இருப்பார்களாம். தலைமைப் பண்பு என்பது உங்கள் கூடவே பிறந்தது. வாழ்க்கையை பற்றிய திறந்த கண் கொண்டு செயல்படுவீர்கள். நீங்கள் சிறந்த நகைச்சுவை சிந்தனை கொண்டவராக இருப்பீர்கள். இந்த சிறப்பு தன்மையே வாழ்வில் உங்களுக்கு நிறைய செல்வத்தை ஈட்டித் தரும். சாகசங்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

சுய துரோகம்
தொழில் துறை வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துபவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மிகவும் நேசிப்பவராக இருப்பீர்கள். சில நேரங்களில் உங்களுக்கு நீங்களே சுய துரோகம் செய்து கொள்வீர்கள். எனவே உங்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். அதிக நம்பிக்கை வேண்டாம். இதனால் பல சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

தொழில்
வியாழன் அன்று பிறந்தவர்கள் ஆசிரியராக பணிபுரியவே பிறந்தவர்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு நடப்பதில் நீங்கள் திறமைசாலிகள். எனவே உங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு நல்ல பிணைப்பு இருக்கும். எனவே நீங்கள் கண்ணமூடிக்கிட்டு ஆசிரியராக முயற்சிக்கலாம். அப்படி இல்லையென்றால் அரசியலில் கூட உங்கள் கால்களை பதிக்கலாம்.

ஏனெனில் நீங்கள் பிறக்கும் போதே தலைவர் தான். நீங்கள் ஒரு சிறந்த லட்சியாவாதி. சேவை மற்றும் வணிகம் இரண்டும் செய்யலாம். சரியான திட்டமிடல் இரண்டு துறையிலும் ஜொலிக்க உதவும். நினைத்தால் பிரதமர் போன்ற உயர் பதவியில் கூட பணிபுரிவது உங்களுக்கு கடினமாக இருக்காது.

காதல் வாழ்க்கை
நீங்கள் புத்திசாலியாக இருப்பதால் உங்களிடம் ஆலோசனை பெறவே மக்கள் விரும்புவார்கள். உங்கள் புத்திசாலித்தனம் ஒன்றே போதும் மற்றவர்களிடம் உங்களை பிரபலமாக்கி விடும். எனவே நண்பர்களை எளிதாக கண்டுபிடித்து விடுவீர்கள்.

இதனால் உங்கள் துணையை கண்டுபிடிப்பதும் உங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்காது. உறவில் வாதங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க விரும்புவீர்கள். நீங்கள் காதல் சாகசங்களை நேசிப்பவராக இருப்பதால் உங்களுக்கு எப்பொழுதும் டிமாண்ட் அதிகம் தான்.

திருமணம்
நீங்கள் புத்திசாலி என்பதால் எப்படி உறவை பேண வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே உங்களுக்கு பொருத்தமான துணை அமைய வில்லை என்றால் சற்று சிக்கல் தான் வரும். இது உங்கள் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை குலைக்க விடாதீர்கள்.

துணையுடன் வெளியே செல்வது ஊர் சுற்றுவது, வேடிக்கை என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். குடும்பத்துடன் சரியான நேரம் ஒதுக்கி சந்தோஷமாக கழித்து வந்தால் உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like